கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொ*லை; சிக்கிய சந்தேகநபர்கள்.!
கொழும்பு – மட்டக்குளி, கெமுணுபுர பகுதியில் கடந்த 31ஆம் திகதி இரவு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸாரால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமைய, மட்டக்குளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று வியாழக்கிழமை (02) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட, மட்டக்குளி பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்றைய தினம் (03) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.