உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தேங்காய் எண்ணெயில் கலப்படம்; வியாபார நிலைய உரிமையாளர்கள் பிணையில் விடுவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

தேங்காய் எண்ணெயில் கலப்படம் மேற்கொண்ட கல்முனை சாய்ந்தமருது பகுதியில் உள்ள 05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணை வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் கலப்படத்தில் ஈடுபட்ட வியாபார நிலையங்கள் மீது வியாழக்கிழமை(2) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஒவ்வொரு வர்த்தகர்களுக்கும் தலா 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டு தண்டணை மற்றும் அபராதம் குறித்து அறிவிப்பதற்காக எதிர்வரும் மே மாதம் 1 மற்றும் 7 ஆம் திகதி மறுதவணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் திடீர் சுற்றிவளைப்பு சோதனையின்போது கல்முனை பிரதேசத்தில் மூன்று வியாபார நிலையங்களிலும், சாய்ந்தமருதில் இரண்டு வியாபார நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த தேங்காய் எண்ணெயில் இவ்வாறு கலப்படம் மேற்கொள்ளப்பட்டமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டபோது கலப்படம் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வியாபார நிலையங்களுக்கு எதிராக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கல்முனை மற்றும் அம்பாறை பகுதிகளில் குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்களுக்கு 01 இலட்சம் ரூபாய் அபராதம் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0