உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இலங்கையின் எரிசக்தித் தேவைகளை பூர்த்தி செய்ய ரஷ்யா விருப்பம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

நாட்டின் எரிசக்தித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ரஷ்யாவில் உயிரிழந்த இலங்கை பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் அந்தநாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ மற்றும் இலங்கையின் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (02) அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை மக்கள் மிகவும் நட்புறவானவர்கள் எனத் தெரிவித்த ரஷ்ய பிரதி அமைச்சர், இலங்கை ரஷ்யாவின் நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்தார். இந்த நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்த ரஷ்யா அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் உறுதியளித்தார்.

இலங்கை கடும் எரிசக்தித் தேவையிலுள்ள தருணத்தில், ரஷ்யா இவ்வாறான உதவிகளை வழங்க முன்வந்துள்ளமையை அமைச்சர் விஜித ஹேரத் பெரிதும் பாராட்டியுள்ளார்.

சுமார் 70 வருடங்களாக நிலவும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இதுவே பொருத்தமான தருணம் என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் நீண்டகால வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0