நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (3) மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 – 25 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.