உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ஓராண்டு காலத் தடுப்புக்காவல் விசாரணைக்குப் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் சுப்பிரமணியம் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பிள்ளையான் கைது செய்யப்பட்டார். அன்று முதல் ஓராண்டு காலமாக அவர் சி.ஐ.டி.யினரின் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.

தடுப்புக் காவல் காலம் முடிவடைந்த நிலையில், நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் அவர் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 2006 ஆம் ஆண்டே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், சுமார் 19 வருடங்களின் பின்னரே இந்த விவகாரத்தில் பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகவும் பிள்ளையான் மற்றும் அவரது தரப்பினரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அண்மைக்காலமாகத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0