உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஜிமெயில் முகவரியில் திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய கூகிள்..

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

சமூகவலைதள உள்நுழைவு தொடங்கி வங்கி, ஆதார் போன்ற அரசு சார்ந்த தேவை என அனைத்து பயன்பாட்டிற்கு பொதுமக்கள் ஈமெயில் முகவரியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதில், உலகளவில் பெரும்பாலான மக்கள் கூகிளின் ஜிமெயிலையே பயன்படுத்துகின்றனர்.

பொதுவாக சமூகவலைத்தள கணக்குகளில் பயனர் பெயரை குறிப்பிட்ட கால இடைவெளியில் நிர்ணயிக்கப்பட்ட முறை பயனர்கள் விரும்பினால் பெயரில் திருத்தம் செய்ய முடியும்.
ஆனால் ஜிமெயில் கணக்கு தொடங்கப்படும் போது என்ன முகவரியில் உருவாக்கப்பட்டதோ அதை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருந்தது. அதன் ஜிமெயில் முகவரியில் திருத்தம் செய்ய விரும்பினால், புதிய ஜிமெயில் கணக்கு தொடங்க வேண்டி இருந்தது.


தற்போது புதிய கணக்கை உருவாக்காமலே ஜிமெயில் முகவரியை(gmail id) திருத்தம் அம்சத்தை கூகிள் வெளியிட்டுள்ளது.கூகுள் கணக்கில் (Settings) ‘தனிப்பட்ட தகவல்’ (Personal Info) ‘Email’ என்ற பகுதியில் Change Google Account email என்பதை கிளிக் செய்து என்பதில் திருத்தம் செய்துகொள்ளலாம்.
முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள கூகிள் பயனர்களுக்கு இந்த வசதி கிடைத்துள்ளது. மற்ற நாடுகளுக்கும் விரைவில் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜிமெயில் முகவரியில் மாற்றம் செய்தாலும், அதே கணக்கு சுயவிவரத்தை வைத்திருக்கும். மேலும் கூகிள் புகைப்படங்களில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், கூகிள் டிரைவில் உள்ள கோப்புகள், யூடியூப் ஆகியவற்றில் எந்த மாற்றமும் ஏற்படாது.
இந்த மாற்றத்திற்கு பின்னர் உங்கள் பழைய ஜிமெயில் முகவரி செயலிழந்து விடாது. மாறாக 2வது ஜிமெயில் முகவரியாக செயல்படும். உங்களது பழைய முகவரி வேறு யாருக்கும் வழங்கப்படாது.

பழைய முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். ஜிமெயில் கணக்கில் உள்நுழையும் போது, இரு முகவரிகளையும் பயன்படுத்தி உள்நுழைய முடியும்.

ஆனால், ஒரு முறை மாற்றம் செய்து விட்டால் குறைந்தது 12 மாதங்களுக்கு பிறகுதான், மீண்டும் இந்த மாற்றத்தை மேற்கொள்ள முடியும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0