உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மலையக விடயங்களைக் கையாள விசேட உயரதிகாரி நியமனம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இந்திய வம்சாவளி மலையக மற்றும் தென்னிலங்கை வாழ் தமிழ் மக்களின் விவகாரங்களைக் கையாள்வதற்காக, ஜனாதிபதி செயலகத்தின் தலைமை அதிகாரி பிரபாத் சந்திரகீர்த்தி விசேட இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தூதுக்குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போதே மலையக மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

கலந்துரையாடப்பட்ட முக்கிய விவரங்கள் வருமாறு:-

காணி மற்றும் வீட்டுரிமை
டித்வா மலையகப் பேரழிவு, காணி உரிமை, மலையகத்தில் தொடர்மாடி வீடுகளை நிராகரித்து தனிவீட்டுத் திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் இந்திய வீடமைப்புத் திட்டம்.

நிர்வாகக் கட்டமைப்பு
தமிழ் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளை அதிகரித்தல், மேலதிக தமிழ் பிரதேச செயலாளர்களை நியமித்தல்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
அரச பொது நிர்வாகம் மற்றும் பொலிஸ் துறையில் தமிழர்களை உள்வாங்குதல், ஆசிரியர் நியமனங்கள், மாகாண மற்றும் வலய மட்டத்தில் தமிழ் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களை நியமித்தல்.

கொழும்பு பாடசாலை விவகாரம்
கொழும்பு றோயல், டீ.எஸ். சேனநாயக்க மற்றும் இசிபத்தன ஆகிய கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் மற்றும் மாணவர் அனுமதி குறைக்கப்படுவது குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

நடைமுறைப்படுத்தல்
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள இணைப்பாளர் பிரபாத் சந்திரகீர்த்தியுடன் கலந்துரையாடி உடன்பாடுகளை எட்ட வேண்டும். அவ்வாறு எட்டப்படும் உடன்பாடுகளை அந்தந்த துறைசார் அமைச்சர்கள் ஊடாக நிறைவேற்றித் தர ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

பங்கேற்பாளர்கள்
இந்தக் கலந்துரையாடலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் அரசியல் குழு உறுப்பினர்களான பரணிதரன், பாரத் அருள்சாமி, நகுலேஸ்வரன், விஜயசந்திரன், சசில்குமார், விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0