உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இன்று முதல் 24 மணிநேர நீர்வெட்டு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

பாதுக்கை, ஹோமாகம மற்றும் பெலன்வத்த ஆகிய பகுதிகளில் இன்று முதல் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடும் வறட்சி காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் திஸ்னா பன்னில தெரிவித்துள்ளார்.

அதன்படி, பாதுக்கை பகுதியில் இன்று வியாழக்கிழமை இரவு 8.00 மணி முதல் நாளை இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும். அதனைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு நீர் வழங்கப்பட்டு, மீண்டும் ஏப்ரல் 07ஆம் திகதி நீர் வெட்டு அமுலாகும்.

இதேவேளை, ஹோமாகம பகுதியில் நாளை வெள்ளிக்கிழமை (03) இரவு 8.00 மணி முதல் ஏப்ரல் 04ஆம் திகதி இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும். இப்பகுதியில் மீண்டும் ஏப்ரல் 08ஆம் திகதி நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

அதேபோல், பெலன்வத்த பகுதியில் ஏப்ரல் 04ஆம் திகதி இரவு 8.00 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என்பதுடன், மீண்டும் ஏப்ரல் 09ஆம் திகதி நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சுழற்சி முறையிலான இந்த நீர் வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

61 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

64 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

84 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0