உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கிளிநொச்சி சாதனை மாணவனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த தொழிலதிபர் ஸ்ரீகுகன்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
21 பார்வைகள்

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மண்ணுக்குப் பெருமை சேர்த்த சாதனை மாணவனை கௌரவிக்கும் விசேட நிகழ்வு இடம்பெற்றது.

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பிரபல வர்த்தகரும், முதலீட்டாளருமான ஸ்ரீகுகன் அம்மாணவனின் அபாரமான கல்விச் சாதனையை பாராட்டி அவருக்கு தங்க மோதிரம் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தனது சொந்த மண்ணின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கோடு, எதிர்காலத் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக சாதனை படைக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் தொழிலதிபர் ஸ்ரீகுகன் செயற்பட்டுள்ளார்.

இன்றைய தினம் (2) மாணவன் தெ.திருக்குமரனின் வீட்டுக்குச் சென்ற தொழிலதிபரின் பணியாளர்கள் குறித்த மாணவன் மற்றும் பெற்றோரை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு, அவர் அனுப்பி வைத்த தங்க மோதிரத்தையும் பரிசாக அணிவித்துள்ளனர்.

தொழிலதிபர் மேற்கொண்ட இந்தச் செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0