கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்.!
கட்டுத் துப்பாக்கிக்கு அகப்பட்ட நிலையில் காயங்களுடன் ஒருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று 10.30 மணிக்கு நோட்டன் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் பிட்டவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
63 வயதுடைய அஜித்குமார என்பவர் தனது வீட்டில் இருந்து பலாக்காய் பிடுங்க சென்ற வேளையில் காட்டு விலங்குகளை வேட்டையாட கட்டப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கிக்கு அகப்பட்ட நிலையில் கால் பகுதியில் படுகாயம் அடைந்த நிலையில் 1990 மூலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கட்டுத் துப்பாக்கி கட்டியது யார் என்று தேடும் பணியில் பொல்பிட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.