உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சட்டவிரோதமாக வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

பதிவுச் சான்றிதழ்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் வாகனங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 21, 39 மற்றும் 44 வயதுடையவர்கள் எனவும் கந்தானை மற்றும் மீகஹவத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போலி ஆவணங்களைத் தயாரித்து வாகனக் கடத்தலில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

குறித்த விசாரணைகளுக்கமைய, நேற்று புதன்கிழமை (01) மீகஹவத்த மற்றும் கந்தானை பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்து 03 கார்கள், 02 ஜீப் ரக வாகனங்கள், 01 லொறி, 01 மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

59 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

81 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

76 0 0