வீட்டின் சுவரில் பாரவூர்தி மோதி விபத்து.!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு அருகில் இன்று (01) மாலை குப்பை அகற்றும் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வீட்டு மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த பாரவூர்தி நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தினால் வீட்டு மதில் சுவர் மற்றும் வீடும் சேதமடைந்ததுடன், பாரவூர்தியின் முன்பகுதியும் கடுமையாக சேதமடைந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.