உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ட்ரம்ப் பெயரில் விமான நிலையம் – எரிக் ட்ரம்ப் அறிவிப்பு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
61 பார்வைகள்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச் என்ற சர்வதேச விமான நிலையம், இனி ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து அழைக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் மற்றும் தொழிலதிபரான எரிக் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்டமூலம் ஒன்றிற்கு புளோரிடா ஆளுநர் ரான் டிசேன்டிஸ் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக புளோரிடா மாகாண பிரதிநிதி மேக் வெயின்பெர்கர், ஆளுநர் ரான் டிசேன்டிஸ், புளோரிடா அட்டார்னி ஜெனரல் ஜேம்ஸ் உத்மெயர் மற்றும் புளோரிடா அவையின் உறுப்பினர்களுக்கும் எரிக் ட்ரம்ப் தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் சர்வதேச விமான நிலையம் என்ற இந்த புதிய பெயர் மாற்றம் வருகிற ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தகவல் தெரிவிக்கின்றது.

ஆனால், மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பெயர் மாற்றங்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிப்பதில்லை என்றும் அது உள்ளூர் விவகாரம் என்றும் தெரிவித்துள்ளது.

எனினும், பயண அட்டவணை மற்றும் தகவல் தொகுப்புகளை மாற்றம் செய்வது உள்ளிட்ட சில நிர்வாக பணிகளை நாங்கள் செய்து முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0