ஹோர்முஸ் வழி எண்ணெய் கப்பல்களுக்கு சுங்கம் – ஈரான் தீர்மானம்.!
ஈரானில் ஹோர்முஸ் நீரிணையை எண்ணெய் கப்பல்கள் கடக்க இனி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் அரசு சுங்கக் கட்டணம் வசூலிக்க அந்நாட்டு பாராளுமன்ற பாதுகாப்பு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 2 ஆயிரம் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் சிக்கியுள்ளன.
பாதுகாப்பான பயணத்திற்காக ஏற்கனவே இரண்டு கப்பல்கள் பணம் செலுத்தியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்தியாவின் 40 சதவீத கச்சா எண்ணெய், 90 சதவீத சமையல் எரிவாயு ஹோர்முஸ் நீரிணை வழியாக கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.