உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பருத்தித்துறைக் கடலில் மூன்று மீனவர்கள் மாயம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

யாழ். பருத்தித்துறை முனைப் பகுதியில் இருந்து நேற்று அதிகாலை கடற்றொழிலுக்குச் சென்ற படகு ஒன்று, இன்று அதிகாலை வரையில் கரை திரும்பாத நிலையில் அதில் பயணித்த மூவரும் காணாமல்போயுள்ளனர் என்று உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை, முனைப் பகுதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை அதிகாலை வழக்கம் போல் மீன்பிடிக்கப் புறப்பட்ட படகு, இன்று அதிகாலை கரை திரும்பியிருக்க வேண்டும். எனினும், நீண்ட நேரமாகியும் படகு கரை திரும்பாததையடுத்து, உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல்போன படகில் மூன்று மீனவர்கள் பயணித்தனர் என்று அவர்களது உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், அவர்களின் விவரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

காணாமல்போன மீனவர்களையும் படகையும் தேடிக் கண்டுபிடிப்பதற்காகக் கடற்படையினரின் உதவி நாடப்பட்டுள்ளது. அத்துடன், அப்பகுதி மீனவர்களும் இணைந்து கடல் பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடலில் நிலவும் சீரற்ற காலநிலை அல்லது இயந்திரக் கோளாறு காரணமாகப் படகு திசைமாறிச் சென்றிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

67 0 0