உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சற்றுமுன் யாழில் இரு சடலங்கள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
23 பார்வைகள்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில், குறித்த சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அல்வாய் பகுதியை சேர்ந்த 78 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் நேற்று (30) தனது வீட்டாருடன் முரண்பட்ட பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறியவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடி சென்றனர்.

இந்நிலையில் இன்று (31) காலை முதியவர் வியாபாரிமூலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாகம் பொலிஸார், முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவர் சுதுமலை பகுதியை சேர்ந்த 75 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

67 0 0