உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

துபாய்க்கு அருகே பிரம்மாண்டமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

துபாய் கடற்பரப்பில் மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.இந்த தாக்குதலுக்கு பின்னர், ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் எரிசக்தி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கடந்த பெப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக, ஈரான் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரப்புகள் வர்த்தகக் கப்பல்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து, மத்திய கிழக்கு முழுவதும் பரவி, உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.சுமார் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பலில் ஏற்பட்ட தீ பின்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.


இந்நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்வடைந்துள்ளதுடன், எரிபொருள் விலை உயர்வு பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.மேலும், மோதல் விரிவடையும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சமாதான முயற்சிகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0