உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றுவோம் – ட்ரம்ப் தெரிவிப்பு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.“ஒருவேளை நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம். கைப்பற்றாமலும் போகலாம். நமக்கு நிறைய வழிகள் உள்ளன. இதற்கு அர்த்தம், நாங்கள் அங்கே சிறிது காலம் தங்க வேண்டியிருக்கும் என்பதே. ஈரானிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

நாங்கள் அதனை எளிதாகக் கைப்பற்றுவோம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.கார்க் தீவில் ஏற்கனவே அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஈரானில் அமெரிக்கா தனது படைகளை இறக்கினால் வளைகுடா நாடுகளில் தரைவழித் தாக்குதல்களை நடத்துவோம் என ஈரான் எச்சரித்திருந்தது.

ட்ரம்ப் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அவைத் தலைவர் அனுமதி வழங்கியுள்ளார். ஈரானின் விவகாரங்களில் அவைத் தலைவர் காலிபாஃப்-ன் முக்கியத்துவத்தை உணர்த்தும்” விதமாக இதனை அவர் தெரிவித்தார்.

மேலும், “ஈரான் எங்களுக்கு பாகிஸ்தான் கொடியேந்திய 10 எரிவாயு கப்பல்களை அளித்துள்ளது. இப்போது, மேலும் 20 கப்பல்களை அவர்கள் அனுப்பியுள்ளனர். அந்தக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வந்து கொண்டிருக்கின்றன. கலீபாஃப் இந்தக் கப்பல்களை நமக்கு அனுப்ப அனுமதியளித்துள்ளார்.

ஈரான் எனக்கு பரிசளிக்கவுள்ளது என்று நான் சொன்னது நினைவிருக்கிறதா? அதற்கு அனைவரும் ‘என்ன பரிசு?’ எனக் கேட்டனர். தற்போது பரிசைப் பற்றித் தெரிந்ததும் அவர்கள் வாயை மூடிக்கொண்டனர். ஈரானுடனான பேச்சுவார்த்தை மிகவும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கின்றது” என ட்ரம்ப் பேசியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0