உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மசகு எண்ணெய் விலை சடுதியாக உயர்வு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய மோதல் தொடர்ந்தும் வரும் நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.குறிப்பாக, அமெரிக்காவின் மசகு எண்ணெய் விலை 2022 ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 அமெரிக்க டொலரை கடந்துள்ளது.

அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதேபோல், சர்வதேச சந்தைக்கான ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலையும் அதிகரித்து, ஒரு பீப்பாய் 112.78 டொலராகப் பதிவாகியுள்ளது.

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகளை அழிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கையே இந்த திடீர் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

அத்துடன், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போக்குவரத்துத் தடைகளை வர்த்தகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

எண்ணெய் விலை உயர்வு மற்றும் மோதல் நிலை காரணமாக அமெரிக்க பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.இதன்படி நேற்றைய வர்த்தக முடிவில் ளுரூP 500 மற்றும் Nasdaq ஆகிய இரண்டு முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0