எரிபொருள் பயன்பாட்டை குறைக்க அமைச்சர்கள் தீர்மானம்.!
ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடியை முன்னிட்டு எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் தீர்மானம் எடுத்துள்ளனர்.
பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரட்ன தெரிவித்ததன்படி, அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாக தன்னார்வத்துடன் குறைத்துள்ளனர்.
மக்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சக செயலர்கள் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளும் இதனை பின்பற்ற தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், தேவையற்ற பயணங்களை தவிர்க்க அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மின்சார சேமிப்பைஉறுதிப்படுத்த, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சார பயன்பாட்டை குறைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.