உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஈரான் போரினால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மை – நளின் ஹேவகே.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

ஈரானில் இடம்பெற்று வரும் போரினால் இலங்கைக்கு சில சந்தர்ப்பங்கள் கிடைக்கப் பெறுவதாக ஆளும் கட்சி தெரிவித்துள்ளது. ஆளும் கட்சி அமைச்சர் நளின் ஹேவகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உலகில் இடம்பெற்று வரும் பாரிய போரினால் ஏற்படக் கூடிய அழிவுகளை மீளக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பங்கள் தொடர்பில் தற்பொழுதிலிருந்தே கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.போரின் பின்னர் முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளில் இலங்கைப் பணியாளர்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் அராசங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவோருக்கு வீசேட வேலை திட்டமொன்றை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.வருடாந்தம் இராணுவத்திலிருந்து 6000 பேர் வரையில் ஓய்வு பெற்றுக் கொள்வதாகவும் இவர்களின் சராசரி வயது 42 எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறானர்களினால் தொடர்ந்தும் பணிகளில் ஈடுபடக்கூடிய திறன் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.ஓய்வு பெற்றுக்கொள்வோரை இலக்கு வைத்து விசேட தொழிற்தகமை சான்றிதழ் கற்கை நெறிகள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளின் ஹெவகே குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

67 0 0