பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பெண் படகு விபத்தில் மரணம்.!
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வந்த 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய், பிலியந்தலை பொல்கொட ஆற்றில் நேற்று (29) மாலை ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தம்பே பகுதியில் குடும்பத்தினருடன் படகு சவாரி மேற்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இலங்கை வந்திருந்த இவர், எதிர்வரும் 5 ஆம் திகதி மீண்டும் பிரித்தானியா திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.