நாளை வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
நாட்டின் சில பகுதிகளில் நாளை (31.3.2026) மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (30.3.2026) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இது வளிமண்டலத்தின் மேலடுக்கு நிலைமையால் ஏற்பட்டதல்ல என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.