உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எரிபொருள் மீதான வரியை கணிசமாகக் குறைத்தது அவுஸ்திரேலியா!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
46 பார்வைகள்

ஈரான் போரினால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவும் வகையில், எரிபொருள் மீதான கலால் வரியை பாதியாகக் குறைத்து, கனரக சாலைப் பயன்பாட்டுக் கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு நீக்கப்போவதாக அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இன்று தெரிவித்துள்ளார்.

வரியைப் பாதியாகக் குறைப்பதால், ஒரு லிட்டர் எரிபொருளின் விலை 26.3 அவுஸ்திரேலிய சென்ட்கள் குறையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், அரசாங்கத்திற்கு ஏற்படும் மொத்த செலவு சுமார் 2.55 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக இருக்கும் என்று பிரதமர் மற்றும் எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் திறைசேரியின் அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறினார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் விநியோகத்தைத் தடை செய்வதற்கு முன்பு, உலகின் எண்ணெயில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்பட்டது.

ப்ரென்ட் மசகு எண்ணெயின் விலை மார்ச் மாதத்தில் 59 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது வரலாற்றிலேயே மிக செங்குத்தான மாதாந்திர உயர்வாகும்.

மார்ச் 30 அன்று சந்தை திறக்கப்பட்டபோது, ​​ஒரு பீப்பாய் மசகு கச்சா எண்ணெயின் விலை 115.66 அமெரிக்க டொலராக இருந்தது.

பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து கான்பெராவால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான எரிபொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்த நடவடிக்கைகள் அண்மையதாகும்.

முன்னதாக, உள்நாட்டு இருப்புகளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை விடுவிப்பதாகவும், எரிபொருள் தர நிர்ணயங்களில் தற்காலிகத் தளர்வு அளிப்பதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
அவுஸ்திரேலிய பெட்ரோலிய நிறுவனத்தின் மார்ச் 29 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் ஒரு லிட்டர் டீசலின் சராசரி சில்லறை விலை 3 அவுஸ்திரேலிய டொலருக்கும் அதிகமாகவும், பெட்ரோலின் விலை 2.50 அவுஸ்திரேலிய டொலர்களாகவும் உயர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0