உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நாசா! மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்காக திகதிகளை நிர்ணயித்துள்ளது.

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
68 பார்வைகள்

மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டத்தின் ஏவுதல் திகதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பல தாமதங்களுக்குப் பின்னர், தற்போது எதிர்வரும் ஏப்ரல் 1ம் ,2ம் , 3ம் , 4ம் , 5ம் , 6ம் மற்றும் 30 ம் திகதிகளில் ஏவுதலுக்கான சாத்தியமான நாட்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.

நிலவு தனது சுற்றுப்பாதையில் சரியான இடத்திற்கு வருவதைப் பொறுத்தே இந்த ஏவுதல் காலம் தீர்மானிக்கப்படும் என்பதால், மிகக் குறுகிய கால அவகாசமே இதற்காக உள்ளது.

1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட அப்போலோ திட்டங்களுக்குப் பிறகு, மனிதர்களை நிலவை நோக்கி அழைத்துச் செல்லும் முதல் முயற்சியாக இது அமையவுள்ளதுடன், விண்கலத்தில் பயணிக்கவுள்ள நான்கு விண்வெளி வீரர்களும் தற்போது முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தில் நாசா கட்டளை அதிகாரி ரீட் வைஸ்மேன், விமானி விக்டர் குளோவர், ஆய்வு நிபுணர் கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி முகவரகத்தின் ஜெரமி ஹேன்சன் ஆகியோர் நிலவை நோக்கிப் பயணிக்கவுள்ளனர்.

பயணத்திற்கு முன்னதாக விண்வெளி வீரர்களுக்கு எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்தவாறே செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் விண்கலத்தின் ஹைதரசன் எரிபொருள் கசிவு மற்றும் மார்ச் மாதம் ஏற்பட்ட ஹீலியம் கசிவு காரணமாக ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

தற்போது இவ் தொழில்நுட்பக்கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, ஏப்ரல் தொடக்கத்தில் விண்கலத்தை ஏவுவதற்கு நாசா இலக்கு நிர்ணயித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0