உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி தெரிவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியின் தெரிவுக் கூட்டம் இன்று (29.03.2026) கட்சியின் வவுனியா மாவட்டத்தின் உபதலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது புதிய நிர்வாகத்தின் தலைவராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அவர்களும், செயலாளராக வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் யோகேஸ்வரன் சனோஜன் அவர்களும் பொருளாளராக மருத்துவர் ஞானசிங்கம் நிரோசன் அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், உபதலைவர், உபசெயலாளர் உள்ளிட்ட நிர்வாகசபை உறுப்பினர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.

குறித்த தெரிவுக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டக் கிளையின் செயலாளர் நடராசா கருணாநிதி, பொருளாளர் சி.சந்திரசேகரம், மாவட்டக் கிளை உறுப்பினர் மயூரதன், பாபு ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0