தோட்டப்புற வைத்தியசாலைகள் புனரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்; பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கைக்கு அமைவாக, மலையகத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் வைத்தியசாலைகளை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஹப்பகஸ்தென்ன தோட்ட வைத்தியசாலை 45 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் புனரமைப்பு பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தயலிங்கம் பிரதீப் நேற்று (27) மேற்பார்வை செய்துள்ளார்.மேலும், குறித்த வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்கள் மற்றும்அத்தியாவசிய வசதிகளை விரைவில் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த விஜயத்தில் இரத்தினபுரி பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.