சிவனடி பாத மலை யாத்திரிகர்களுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விழிப்புணர்வு.!
சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வரும் யாத்திரிகர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இன்று நோட்டன் தியகல பகுதியில் இடம்பெற்றது.
தேசிய நீர் வடிகால் திணைக்களம் அருகே “க்ளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாத்திரிகர்களுக்கு நோய் தொற்றுகளைத் தவிர்க்கும் வகையில் பானங்கள் வழங்கப்பட்டதுடன், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
சிவனடி பாத மலை நோக்கிச் செல்லும் பிரதான சாலைகள் மற்றும் மலைப்பகுதிகளில் கழிவு பொருட்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பொலித்தீன் போன்றவற்றை வீசாமல் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அப்பகுதியில் ஏற்பட்ட வனத் தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனுடன், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.