அனுமதியின்றி 1235 லீற்றர் டீசல் வைத்திருந்த நபர் கைது.!
வரகாபொல, மாஹேன பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 1235 லீற்றர் டீசலை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கேகாலை கோட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றது.
கைது செய்யப்பட்டவர் தோலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.