கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 பாதையில் சுரங்கப்பாதை அமைப்பு பணிகள் துரிதம்.!
கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் பரபரப்பான பகுதியில் நிலவும் கடும் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் சுமார் 700 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு விரைவான தீர்வை வழங்கும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் அண்மையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுரங்கப்பாதை நிர்மாணம் நிறைவடைந்ததும், ஏ9 வீதியூடான போக்குவரத்து சீரடைவதுடன், பிரதான நகரங்களுக்கிடையிலான இணைப்புத்திறனும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.