உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர்,

ஏப்ரல் 1ஆம் திகதி முதல் பொதுமக்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும் வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும். கொழும்பு உட்பட பிரதான நகரங்களின் புகையிரத நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களை மையப்படுத்தி மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

புத்தாண்டு கொள்வனவுகளுக்காக நகருக்கு வருவோரின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் சன நெருக்கடியை கட்டுப்படுத்துவதுமே எமது பிரதான நோக்கமாக கருதப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபரின் விசேட அறிவுறுத்தலின் பேரில், பொது இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், அந்தந்தப் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் கீழ் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

38 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0