உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கம்மன்பில புத்தகம் விசாரணைக்கு உதவும் – அமைச்சர் நளிந்த தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி குறித்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தனது புத்தகத்தின் மூலம் தகவல்கள் வெளியிட்டால், விசாரணைகளை முன்னெடுக்க அது உதவியாக இருக்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.’


ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் கூறியதாவது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வரும் விசாரணைகளில் தேடப்பட்டுவரும் முக்கிய சூத்திரதாரி தொடர்பான தகவல்கள் கம்மன்பில வெளியிட்டால், விசாரணை அதிகாரிகள் அதனை அடிப்படையாகக் கொண்டு வாக்குமூலங்களைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த முடியும் என்றார்.


மேலும், குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மைகள் வெளிவர வேண்டும் என்பதற்காகவே விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், உண்மைகள் வெளியாகும் சூழலில் எதிர்க்கட்சியின் சிலரின் செயற்பாடுகள் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றனஎன்றும் அவர் குறிப்பிட்டார்.


அத்துடன், கம்மன்பிலவை கைது செய்வது குறித்து அரசாங்கம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், அவர் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

29 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

39 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

59 0 0