இந்திய உதவியுடன் எரிபொருள் கப்பல் நாளை கொழும்பு வருகை.!
20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றிய கப்பல் ஒன்று நாளை (28) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர், இந்த எரிபொருள் கப்பல் இலங்கைக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.