உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இளவாலை வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்காமை; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காமையும் வைத்தியர் கடமையில் இல்லாமையும் தொடர்பான செய்தியை அடுத்து இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் விளக்கம் கோரியுள்ளது.

இவ்விளக்கத்தை 30.03.2026 இற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ். பிராந்திய இணைப்பாளர் தன்.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இளவாலை ஹென்றிஸ் பாடசாலை மாணவன் ஒருவர் பாடசாலை முடிந்து வீடு செல்லும்போது வீதியில் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை மேற்குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையிலேயே அங்கு சிகிச்சை வழங்காத நிலை காணப்பட்டது.

பின்னர் குறித்த மாணவனை, பாடசாலையின் முச்சக்கர வண்டியை வைத்தியசாலைக்கு வரவழைத்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

60 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

57 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

60 0 0