உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி உந்துருளி கொள்ளை; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி ஒருவரைக் காயப்படுத்தி உந்துருளி ஒன்றைக் கொள்ளையிட்ட சம்பவத்திற்கு உதவிய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோனவில மற்றும் கலிகமுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) மாலை, இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி உந்துருளி கொள்ளையிடப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக சிலாபம் பிரதேச குற்ற புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளில் ஈடுபட்டனர்.

குறித்த விசாரணைகளின் அடிப்படையில், இந்த குற்றத்திற்குத் திட்டமிட்டு உதவிய சந்தேகநபர்கள் இருவர் நேற்று மாலை கிரிமெட்டியான சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து, 22 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் அவர்கள் பயணித்த உந்துருளி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் சிலாபம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

60 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

57 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

60 0 0