உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அலங்காரத் தாவரங்களை கடத்திய நபர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

தாய்லாந்தில் இருந்து சுமார் 02 இலட்சம் ரூபா பெறுமதியான அலங்காரத் தாவரங்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கண்டியைச் சேர்ந்த 56 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான UL-405 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.

இவர் தான் கொண்டு வந்த பயணப் பொதிக்குள் காகிதங்களால் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 02 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலங்காரத் தாவரத் தொகுதியை எடுத்து வந்துள்ளார்.

இத்தாவரங்களை இலங்கைக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான முறையான இறக்குமதி அனுமதிப்பத்திரம் அல்லது தாவர சுகாதார பாதுகாப்பு சான்றிதழ்கள் எதனையும் அவர் பெற்றிருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்கொள்ளப்பட்ட முறையான சுங்க விசாரணைகளின் பின்னர், குறித்த தாவரத் தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

அத்துடன், இத்தாவரங்கள் மூலம் நாட்டுக்குள் ஏற்படக்கூடிய உயிரியல் ரீதியான பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, அவற்றை அழிப்பதற்கென கட்டுநாயக்க தாவர தனிமைப்படுத்தல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

60 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

57 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

60 0 0