இஸ்ரேலில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 160க்கும் மேற்பட்டோர் காயம்.!
இஸ்ரேலின் தெற்கு பகுதிகளான டிமோனா மற்றும் ஆராத் நகரங்களில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலின்போது குறைந்தது இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைத் தடுக்க இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அணுசக்தி நிலையத்துக்கு அண்மையிலுள்ள வான் பாதுகாப்பு அமைப்பை ஈரானிய ஏவுகணைகள் ஊடுருவிய முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளிகளில், ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கும் போது பெரிய அளவிலான வெடிப்புகள் இடம்பெறும் காட்சிகள் பதிவாகியுள்ளன.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.