கியூபாவில் மீண்டும் மின் கட்டமைப்பு செயலிழப்பு – மக்கள் பாதிப்பு.!
கியூபாவின் தேசிய மின் கட்டமைப்பான ஹவாகா மின்கட்டமைப்பு மீண்டும் பாரியளவில் செயலிழந்துள்ளது.இதனால் அந் நாட்டில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் ஆகியன மின்சாரமின்றி முடங்கியுள்ளன.கியூபாவில் இவ்வாறு நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும்.
மின் செயலிழப்பு தொடர்பில் கியூபாவின் எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில், மின்சார விநியோகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதில் கியூபா பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.
இந்த எரிபொருள் தட்டுப்பாடே மின் கட்டமைப்பு அடிக்கடி செயலிழப்பதற்குக் பிரதான காரணமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.