உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – இஸ்ரேல் பிரதமர் அழைப்பு.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

இஸ்ரேலில் ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.ஜெருசலேம், அராத் மற்றும் டிமோனா நகரங்களை இலக்காகக் கொண்டு கடந்த இரண்டு நாட்களாக ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


தாக்குதலில் பாதிக்கப்பட்ட அராத் நகரை இன்று பார்வையிட்டபோது கருத்து தெரிவித்த நெதன்யாகு, கடந்த 48 மணிநேர நிகழ்வுகள் ஈரான் உலகளாவிய அச்சுறுத்தலாக இருப்பதற்கான சான்று எனக் குறிப்பிட்டார். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


ஜெருசலேமின் மேற்குச் சுவர், புனிதகல்லறை தேவாலயம் மற்றும் அல்-அக்ஸா பள்ளிவாசல் அருகில்கூட ஏவுகணைகள் வீசப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.


மேலும், சர்வதேச கடல் வழிப் பாதைகளை பாதித்து எரிசக்தி நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக ஈரானை குற்றம்சாட்டிய அவர், உலக நாடுகள் இணைந்து இதற்கு எதிராக செயல்பட வேண்டிய நேரம் இது என வலியுறுத்தினார்.இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், உலக நாடுகளின் தலைவர்கள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0