உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானியாவின் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அரபிக்கடலில் நிலைநிறுத்தம்.!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
81 பார்வைகள்

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானிய அரச கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் அரபிக்கடலை வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பிரித்தானிய இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு பிரித்தானியப் பிரதமர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இந்த நகர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய அரச கடற்படைக்குச் சொந்தமான ‘HMS ஆன்சன்’ என்ற இந்த நீர்மூழ்கிக் கப்பல், கடந்த மார்ச் 06 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. இது தற்போது ஹோமுஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வடக்கு அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

சுமார் 1,600 கிலோமீற்றர் தூரம் வரை பாய்ந்து செல்லக்கூடிய டொமாஹாக் ஏவுகணைகள் மற்றும் டொர்பிடோ ரக ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்காவிற்குப் பிரித்தானியா தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ள பின்னணியில் இந்த அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலின் வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0