உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!

உலக செய்திகள் 6 மாதங்கள் முன்
58 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு அமைவாக, ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான எதிர்காலத் தாக்குதல்களை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை (19) இரவு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.மேலும், ஈரானுடனான போரில் ட்ரம்ப்பை இழுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நெதன்யாகு நிராகரித்தார்.

ஜெருசலேம் மற்றும் ஈரானின் தலைநகரான தெஹ்ரானிலும் வெடிச்சத்தங்கள் கேட்டன – தனது உள்கட்டமைப்பு மீது மேலும் தாக்குதல்கள் நடந்தால், தெஹ்ரான் எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி பதிலடி கொடுக்கும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் முன்னதாக எச்சரித்திருந்தார்.

ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கடந்த சில மணிநேரங்களில் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்துள்ளன.இந்தத் தாக்குதல்களுக்கு ஈரானின் ஆக்கிரமிப்பே காரணம் என ஐக்கிய அரபு அமீரகமும் பஹ்ரைனும் கூறியுள்ளன.

கடந்த மாதம் போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் வளைகுடா அரபு நாடுகளில் உள்ள எரிசக்தி நிலையங்களைத் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கி வருகிறது.ஆனால், புதன்கிழமை ஈரானின் மிகப்பெரிய எரிவாயு தளம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், அரபு நாடுகள் கடுமையாகத் தவிர்க்க முயன்ற அதே பதற்ற அதிகரிப்பைத் தூண்டிவிட்டது.

ஈரான் எரிசக்தி தளம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக தெஹ்ரான் கட்டாரின் ராஸ் லஃபான் எரிசக்தி வளாகத்தின் மீதான தாக்குதலை அரங்கேற்றியது.இது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் எரிவாயுவின் விலையை கடுமையாக உயர்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0