உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தெஹ்ரான் மீது கூட்டு வான்வழித் தாக்குதல்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
53 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்கி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரான் இதுவரை கண்டிராத மிக உக்கிரமான வான்வழித் தாக்குதல்களைச் சந்தித்துள்ளது.

திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்த குண்டுவீச்சு சம்பவங்களால் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் தெஹ்ரான் மாநகரம் அதிர்ந்து போயுள்ளது.

தாழ்வாகப் பறந்த போர் வானூர்திகள், தெஹ்ரானின் குடியிருப்பு பகுதிகளில் கனரக வெடிகுண்டுகளை வீசின. இதனால் கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் தரை அதிர்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், தெஹ்ரான் மட்டுமின்றி, இஸ்ஃபஹான் மற்றும் கரஜ் போன்ற முக்கிய நகரங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.மின்சார உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்ததால் நீல நிற ஒளிப்பிழம்புகள் வானில் தோன்றியதோடு, நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின.

சில மணிநேரங்களில் மின்சாரம் சீர்செய்யப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 11-வது நாளாக இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிக நீண்ட கால இணைய முடக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தகவல் தொடர்பு வசதி இல்லாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதேவேளை, தெஹ்ரான் போன்ற நகரங்களில் முறையான பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் இல்லாதது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0