ஈராக்கில் அமெரிக்க அரசதந்திர நிலையம் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்.!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழிப் போருக்குப் பதிலாக, தெஹ்ரான் ஆதரவுக் கிளர்ச்சிப் படையினர் இந்த தாக்குதலைச் செய்திருக்கக்கூடும் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் இதனை அறிந்துரைத்தது.
பாக்தாத் விமானநிலையத்திற்கும், ஈராக்கிய ராணுவத் தளங்களுக்கும் அருகிலுள்ள அரசதந்திர துணை நிலையம் மீது ஆறு ஆளில்லா வானூர்திகள் அனுப்பப்பட்டதாகவும், அதில் ஒன்று கட்டடத்தின் மீது பாய்ந்து தாக்கியதாகவும், மற்ற ஐந்து வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானியத் தரப்பில் 1,300க்கும் மேற்பட்டோர் இந்த மோதலில் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஈரான் தூதர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இஸ்ரேல் ஈரானிய தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.அமெரிக்க ராணுவம், தமது படையினரில் 7 பேர் உயிரிழந்ததாகவும், கிட்டத்தட்ட 150 பேர் காயமுற்றதாகவும் தெரிவித்துள்ளது.