மத்திய கிழக்கு பதற்றம்: அபுதாபி விமான சேவை ஆண்டு இறுதி வரை ரத்து.!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை முன்னிட்டு, அபுதாபிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளையும் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் எயார்வேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பஹ்ரைன், அம்மான், தோஹா, டுபாய் மற்றும் டெல் அவிவ் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் இந்த மாத இறுதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.