உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உலகச் சந்தையில் வீழ்ச்சியடைந்த கச்சா எண்ணெய் விலை.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
75 பார்வைகள்

உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, கடந்த திங்கட்கிழமை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 2022 ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 100 அமெரிக்க டொலர்களைக் கடந்ததுடன், அதிகபட்சமாக 119 டொலர்கள் வரை பதிவாகியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், “போர் மிக விரைவில் முடிவுக்கு வரும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 90 டொலர்கள் வரை சரிவடைந்தது. இது 8 சதவீத வீழ்ச்சியாகும்.

இன்று காலை ஆசிய சந்தை வர்த்தகம் ஆரம்பமான போது, ஈரானியப் போர் சூழலால் கடந்த சில நாட்களாக நிலவிய கடும் ஸ்திரமற்ற நிலைக்குப் பிறகு, எண்ணெய் விலைகள் ஒப்பீட்டளவில் ஸ்திரமான நிலையை எட்டியுள்ளன.

இன்று காலை நிலவரப்படி, அமெரிக்க கச்சா எண்ணெய் (WTI) ஒரு பீப்பாய் சுமார் 83.35 டொலர்கள். பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் சுமார் 87.88 டொலர்கள் வரை பதிவாகியிருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0