ஈரான் போரில் 140 அமெரிக்க வீரர்கள் காயம்: 7 பேர் உயிரிழப்பு.!
ஈரானுடனான போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை சுமார் 140 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதுடன், 7 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குவைத் மற்றும் சவூதி அரேபியா பகுதிகளில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் விளைவாகவே இந்த உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த வீரர்களில் 8 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்ற காயமடைந்தவர்களில் 108 பேர் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தங்களது பணிகளுக்கு திரும்பியுள்ளனர் என பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் தெரிவித்துள்ளார்.