உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் ஸ்கொட்லாந்தின் பரபரப்பான ரயில் நிலையம்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
61 பார்வைகள்

கிளஸ்கோவில் நான்கு மாடி கட்டிடத்தை அழித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் போரடி வரும் நிலையில் அதன் அருகிலுள்ள மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் செவ்வாய்க்கிழமை (10) மூன்றாவது நாளாகவும் மூடப்பட்டுள்ளது.

கிளாஸ்கோ மத்திய ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள யூனியன் தெருவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் அருகிலுள்ள பல வர்த்தக நிலையங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

கிளாஸ்கோ மத்திய ரயில் நிலையம் மூடப்பட்டதால், அந்த நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் அதன் வழியாகச் செல்லும் அனைத்துப் போக்குவரத்தும் தடைபடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமையும் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், அது எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

தீப்பரவலானது தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், அவசர சேவைகள் இன்னும் தளத்தில் உள்ளதாகவும், அவர்களின் மீட்பு பணிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றோம் என்று ஸ்கொட்லாந்து ரயில் வலையமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், தீ விபத்தில் சேதமடைந்த வர்த்தக நிலையங்களுக்கு உதவுவதற்காக 80,000 பவுண்ட்ஸுக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளது.தீ விபத்தில் அதிக சேதம் அடைந்த கட்டிடம் 1851 ஆம் ஆண்டுக்கு முந்தையது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0