உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை நிராகரித்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
36 பார்வைகள்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்காக முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.சட்டமூலத்துக்கு எதிராக 307 வாக்குகளும், ஆதரவாக 173 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

குழந்தைகள் நல்வாழ்வு மற்றும் பாடசாலைகள் சட்டமூலம் சட்டமாக மாறிய 12 மாதங்களுக்குள் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையினை கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் லார்ட் நாஷ் கடந்த வாரம் முன்வைத்தார்.

சட்டமூலம் பிரபுக்கள் சபையால் ஆதரிக்கப்பட்டது, ஆனால் திங்கட்கிழமை (10) இரவு பொதுமக்கள் சபையினால் 134 பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

கடந்த டிசம்பரில் அவுஸ்திரேலியா 16 வயதுக்கு உட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையினை அமுல்படுத்தி உலகின் முதல் நாடாக மாறிய பின்னர் இந்த தடைக்கான அழைப்புகள் அதிகரித்துள்ளன.அப்போதிருந்து, ஐரோப்பா உட்பட ஏனைய நாடுகள் இந்த யோசனையை பரிசீலித்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0