ஹோர்மூஸ் ஜலசந்தியில் ஈரான் நடவடிக்கைக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை.!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்துவதோடு, ஈரானும் பதிலாக தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதனிடையே ஹோர்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைப்பதைத் தடுக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஊடகங்களின் செய்திகளின் படி, “ஹோர்மூஸ் ஜலசந்தியில் எண்ணெய் போக்குவரத்தை தடுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டால், இதுவரை சந்தித்ததைவிட இருபது மடங்கு அதிக தாக்குதல்கள் அமெரிக்காவால் நடைபெறும்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
உலக எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% எண்ணெய் ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகவாக வெளிநாட்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.ட்ரம்ப் மேலும், “ஈரான் மீண்டும் ஒரு தேசமாக கட்டியெழுப்பப்படுவதில்லை. மரணம், நெருப்பு, தீங்கு அவர்கள் மீது தாக்கும்; ஆனால், அது நிகழக்கூடாது என்று நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.