உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

எரிவாயு தட்டுப்பாடு – பாகிஸ்தானில் பாடசாலைகள் மூடல்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
32 பார்வைகள்

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறையளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது.

தடையை மீறி எண்ணெய் கொண்டு செல்ல நினைத்தால் அக் கப்பலை அழிப்போம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் சர்வதேச அளவில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்ககைளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று (09) தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப், எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க பாடசாலைகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையவழியாக வகுப்புகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதனிடையே அரச அதிகாரிகளுக்கான பெற்றோல், டீசல் ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.அரச அலுவலகங்கள் அனைத்தும் நான்கு நாட்கள் மட்டும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0